/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மகளிர் பள்ளி 98 சதவீத தேர்ச்சி
/
அரசு மகளிர் பள்ளி 98 சதவீத தேர்ச்சி
ADDED : மே 08, 2024 12:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிளஸ் 2 தேர்வில், 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் செயல்படும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2023 -- 24ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வை, 204 மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 200 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி, 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இதில், மாணவி தரணி 555 மதிப்பெண், வைஷ்ணவி, 551 மதிப்பெண், ஜோதிகா மற்றும் காயத்ரி தலா, 548 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். மொத்தம், 24 மாணவியர், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளதாக, பள்ளி தலைமையாசிரியை புனிதவதி தெரிவித்தார்.

