/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலையில் வீணாகும் அரசு அலுவலர் குடியிருப்பு
/
உடுமலையில் வீணாகும் அரசு அலுவலர் குடியிருப்பு
ADDED : ஆக 29, 2024 10:16 PM

உடுமலை : உடுமலையில், அரசு அலுவலர் குடியிருப்பு பயன்படுத்தாமல், வீணாகி வருகிறது.
உடுமலை பழநி ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகே, 15 ஆண்டுகளுக்கு முன், சர்வேயர் குடியிருப்பு கட்டப்பட்டது. இதனை சர்வே துறையில் பணியாற்றியவர்கள் யாரும் பயன்படுத்தாத நிலையில், புதர் மண்டி காணப்படுகிறது.
கட்டுமானங்கள் சிதிலமடைந்தும், கதவு, ஜன்னல் மற்றும் மின் உபகரணங்கள் உடைந்தும், அரசு நிதி பல லட்சம் ரூபாய் வீணாடிக்கப்பட்டுள்ளது.கட்டடத்தை பயன்படுத்தாத நிலையில், சர்வேயர்களுக்கு, அரசு சார்பில் வீட்டு வாடகை படி வழங்கப்பட்டு வருகிறது.
பிரதான ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் அருகில், அரசுக்கு சொந்தமான கட்டடம் புதர்மண்டியும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இந்த அரசு கட்டடத்தை முறையாக பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

