/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி
/
அரசு பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வில் வெற்றி
ADDED : ஜூன் 06, 2024 11:59 PM
உடுமலை;உடுமலையை சேர்ந்த இரண்டு அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மருத்துவத்துறை இளநிலை படிப்பிற்கான 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. நடப்பாண்டு மே 5ல் 'நீட்' தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள், கடந்த 4ல் வெளியிடப்பட்டது.
திருப்பூர் மாவட்ட அளவில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியை சேர்ந்த, 464 மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுதினர். அதில், 236 மாணவர்கள் 'கட் ஆப்' மதிப்பெண் அதிகம் பெற்று மருத்துவ படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.
உடுமலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சதீஷ், 520 மதிப்பெண், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கயல்விழி, 454 மதிப்பெண் பெற்று 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவியருக்கு பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.