/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலத்தின் கீழ் மைதானம்; மாநகரில் 'புதுமை'
/
பாலத்தின் கீழ் மைதானம்; மாநகரில் 'புதுமை'
ADDED : ஆக 23, 2024 01:56 AM

திருப்பூர்;திருப்பூர், எஸ்.ஆர்.சி., மில் பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள, கிரிக்கெட் - பேட்மின்டன் - கூடைப்பந்து பயிற்சி மைதானம் பயன்பாட்டுக்கு வந்தது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் பாலத்தின் கீழ் பயிற்சி மைதானம் அமைக்கும் பணி, மதான் பவுண்டேஷன் மூலம் நடந்தது. மாநகராட்சி நிர்வாகம், சமூக, தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் பணிகள் முடிந்த நிலையில், நேற்று திறப்பு விழா நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மதான் பவுண்டேஷன் இயக்குனர் பூபேந்திர மதான் வரவேற்றார். ஏற்றுமதியாளர் சங்க கவுரவத் தலைவர் சக்திவேல், வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம், கிட்ஸ்கிளப் குழுமங்களின் சேர்மன் மோகன்கார்த்திக் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
பாலத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பேட்மின்டன், கூடைப்பந்து, கிரிக்கெட் பயிற்சி இடத்தை, சிறப்பு விருந்தினர்கள், ரிப்பன் வெட்டி, திறந்து வைத்தனர்.

