/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளநிலை மாணவர் சேர்க்கை உதவும் வழிகாட்டி மையம்
/
இளநிலை மாணவர் சேர்க்கை உதவும் வழிகாட்டி மையம்
ADDED : மே 07, 2024 10:52 PM
உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை சேர்க்கை குறித்து மாணவர்கள் ஆர்வத்துடன் வழிகாட்டி மையங்களை பயன்படுத்துகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையொட்டி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையொட்டி, கல்லுாரிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் இளநிலை மற்றும் முதுநிலைப்பிரிவில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பொள்ளாச்சி, தாராபுரம், உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் ஆர்வத்துடன் அரசு கல்லுாரியில் சேர்கின்றனர்.
கடந்த ஆண்டு முதல் விண்ணப்பிக்கும் முறை ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் பலரும் வீட்டிலிருந்து விண்ணப்பித்தனர்.
இருப்பினும், விண்ணப்பிக்கும் முறையில் சில மாற்றங்கள் இருப்பதால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால் கல்லுாரி வழிகாட்டி மையங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
அரசு கல்லுாரியில் உள்ள வழிகாட்டி மையத்தில், மாணவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பேராசிரியர்கள் முழுமையாக விளக்கமளித்து, மாணவர்களுக்கு தெளிவு படுத்துகின்றனர்.

