/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாநல்லுாரில் நாளை குண்டம் திருவிழா
/
பெருமாநல்லுாரில் நாளை குண்டம் திருவிழா
ADDED : மார் 25, 2024 12:56 AM

அனுப்பர்பாளையம்;பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நாளை பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்; 650 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவர்.
பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.
கோவில் குண்டம் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நாளை (26ம் தேதி) அதிகாலை நடக்கிறது. அன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
பக்தர்கள் வரிசையாக நின்று அம்மனை தரிசிக்க தடுப்பு அமைக்கப்பட்டு பந்தல் போடப்பட்டுள்ளது. குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு ஏற்படுத்தப்பட்டு அங்கும் பந்தல் போடப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தை சுற்றி மின் விளக்கு, 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா, 30 இடங்களில் மொபைல் டாய்லெட் அமைக்க பட்டுள்ளது. கோவில் உள் வளாகத்தில் 10 இடங்களில் ராட்சத மின் விசிறி நிறுவப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த திருப்பூர் ரோட்டில் பெருமாநல்லுார் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி எதிரிலும், அவிநாசி ரோட்டில் சவுமியா மருத்துவமனை எதிரிலும், நம்பியூர் ரோட்டில் லட்சுமி வாட்டர் சர்வீஸ் எதிரிலும், குன்னத்துார் ரோட்டில் எம்.எல்.ஆர்., திருமண மண்டபம் எதிரிலும், ஈரோடு ரோட்டில் ராபா ஹோண்டா ஷோரூம் அருகிலும், இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் எஸ்.பிக்கள் இருவர் தலைமையில், மூன்று டி.எஸ்.பி., 11 இன்ஸ்பெக்டர், 28 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், ஊர் காவல் படையினர் என 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
---
3 காலம்
பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நாளை பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்; பக்தர்கள் வரிசையாக வர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

