/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு குருசர்வா சி.ஏ., அகாடமி பாராட்டு
/
சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு குருசர்வா சி.ஏ., அகாடமி பாராட்டு
சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு குருசர்வா சி.ஏ., அகாடமி பாராட்டு
சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு குருசர்வா சி.ஏ., அகாடமி பாராட்டு
ADDED : மே 11, 2024 12:32 AM

திருப்பூர்:பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியின் கல்விச் செலவை குரு சர்வா அகாடமி ஏற்றுக் கொண்டது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழக அளவில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் - அருள்புரத்தை சேர்ந்த மாணவி மகாலட்சுமி சிறப்பிடம் பெற்றார். அவருக்கு திருப்பூர் குருசர்வா சி.ஏ., அகாடமியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அகாடமியின் சி.இ.ஓ., அருணாச்சலம், தாளாளர் சுதாராணி ஆகியோர் மாணவி மகாலட்சுமிக்கு பாராட்டு தெரிவித்தனர். தற்போது குரு சர்வா அகாடமியில் சி.ஏ., பயின்று வருகிறார். அவரது சி.ஏ., படிப்புக்கான கல்வி செலவை, அகாடமி சார்பில் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.