ADDED : மே 29, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;திருப்பூர் அருகே குன்னத்துார் போலீசார் நேற்று முன்தினம் பெருமா நல்லுார் ரோடு மகளிர் அரசு பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்துக்கிடமாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் கோவை அருகே பேரூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, 55, என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு எடுத்து செல்வதும் தெரிய வந்தது
அவரை கைது செய்த போலீசார், பைக் மற்றும் 44.5 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.