/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கைத்தறி ஆடைகள் தள்ளுபடி விற்பனை துவக்கம்
/
கைத்தறி ஆடைகள் தள்ளுபடி விற்பனை துவக்கம்
ADDED : செப் 10, 2024 02:21 AM
உடுமலை:கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின், தள்ளுபடி சேவையை பயன்படுத்துவது குறித்து, மாவட்ட கல்வித்துறை வழிமுறை வழங்கியுள்ளது.
கைத்தறி நெசவாளர் தயாரித்து வழங்கும் கைத்தறி ஆடைகளை, அனைத்து தரப்பினரும் விரும்பி அணிகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், அரசு சார்பில் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கைத்தறி ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
திருப்பூர் மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில், 1.5 லட்சம் நெசவாளர்களை உள்ளடக்கிய கோ -ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் நடப்பாண்டு தீபாவளியையொட்டி, செப்., முதல் அக்., வரை தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் சார்பில், 30 சதவீத தள்ளுபடி விற்பனை அறிவித்துள்ளது.
கோ - ஆப்டெக்சின் கைத்தறி ஆடைகள் முன்பணம் கடன் விற்பனைக்காக, திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு சென்று வளாக விற்பனை மேற்கொள்வதற்கு உள்ளனர்.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள், பள்ளி பாட வேளைக்கு இடையூறு ஏற்படாத வகையில், கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்களுக்கு ஒத்துழைக்கலாம். இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.