/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவையில் 5ம் தேதி வரை 'பேரின்ப பெருவிழா'
/
கோவையில் 5ம் தேதி வரை 'பேரின்ப பெருவிழா'
ADDED : மே 03, 2024 12:51 AM
திருப்பூர்:கோவையில், இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பில், 'பேரின்ப பெருவிழா 2024' நிகழ்ச்சி, கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., ஆண்கள் பள்ளி மைதானத்தில் துவங்கி நடந்து வருகிறது.
கடந்த முதல் தேதி துவங்கிய இந்நிகழ்ச்சி, 5ம் தேதி வரை நடக்கிறது. துவக்க நிகழ்ச்சிக்கு, போதகர் ஜான்சன் சத்தியநாதன், தலைமை வகித்தார். போதகர்கள் கிறிஸ்டோபர், நெல்சன் ஜார்ஜ், சாலமன் பிரேம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
முதல் நாள் நிகழ்ச்சியில், சுவிசேஷகர் ஸ்டீபன், இறை செய்தி வழங்கினார். பின், இயேசுவின் அன்பின் ஊழிய ஸ்தாபகர் டாக்டர். அப்போஸ்தலர் ஜவகர் சாமுவேல், நற்செய்தி வழங்கினார். டாக்டர். டேனியல் ஜவகர், போதகர் பென்னி விசுவாசம் ஆகியோர் ஆராதனை நடத்தினர்.
வரும் நாட்களில் போதகர்கள் ஆல்வின் தாமஸ், குரூஸ் திவாகரன், டேவிட் பிரகாசம், ஜான் ஜெபராஜ், ஜோயல் தாமஸ்ராஜ், பென் சாமுவேல் ஆகியோர், இறைசெய்தி வழங்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, பேராயர் பெக்சல் ஜேக்கப் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.