/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்
/
கல்லுாரியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 25, 2024 11:09 PM

அவிநாசி : அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம், கல்லுாரியின் போதைப்பொருள் தடுப்பு குழு, பொது சுகாதாரத்துறை, சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன இணைந்து இந்த சுகாதார விழிப்புணர்வு முகாமை நடத்தின.
இதனையொட்டி, கருத்தரங்கு நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். நோய் தொற்று பரவாமல் தடுப்பது, டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் முறை, புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து, வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் பரமன், புகையிலை தடுப்பு பிரிவு பிரவீன்குமார், தொழுநோய் அலுவலக நலக்கல்வியாளர் ராஜ்குமார், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் பூபதி ஆகியோர் பேசினர்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தாரணி மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். கல்லுாரி போதை பொருள் தடுப்பு குழு பொறுப்பாளர்கள் அருண்குமார், மணிவண்ணன், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

