/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி குவெஸ்ட் பள்ளியில் பாரம்பரிய தின விழா
/
தி குவெஸ்ட் பள்ளியில் பாரம்பரிய தின விழா
ADDED : ஏப் 28, 2024 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், அவிநாசி ரோடு, அவிநாசிலிங்கம்பாளையத்தில், இயங்கும், தி குவெஸ்ட் இன்டர் நேஷனல் பள்ளியில், பாரம்பரிய தின விழா, கொண்டாட்டம் நேற்று நடந்தது.
பள்ளி தலைவர் கலாமணி, நிர்வாக இயக்குனர் நிவேதாதர்ஷன், இயக்குனர் தர்ஷன், முதல்வர் துர்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரம்பரிய தினத்தை கொண்டாடும் விதமாக நம் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கும்மி நடனம் நடந்தது. குழந்தைகளுக்கும் பவளக்கொடி கும்மி நடனம் கற்றுத்தரப்பட்டது.
கும்மி நடனக்குழு மூத்த ஆசிரியர்கள் அருணாச்சலம், விஸ்வநாதன், சிற்பக்கலை வல்லுனர் ஸ்தபதி கனகரத்தினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

