/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அதிவேக' மினி பஸ் பொதுமக்கள் ஆவேசம்
/
'அதிவேக' மினி பஸ் பொதுமக்கள் ஆவேசம்
ADDED : ஜூலை 13, 2024 12:22 AM

திருப்பூர்;திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, வேகமாக வந்த மினி பஸ் மோதியதில் ஒரு பெண் காயமடைந்தார். ஆவேசமடைந்த பொதுமக்கள் மினி பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள், அதிவேகமாக வருவது, பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. குறிப்பாக, மினி பஸ்கள், பெரும்பாலான நேரங்களில், போக்குவரத்து விதிமுறைகளைக் கடைபிடிப்பதே இல்லை.
நேற்று மதியம் 1:30 மணியளவில், காமராஜ் ரோட்டைக் கடந்து சென்ற ஒரு பெண் மீது அவ்வழியாக அதிவேகமாக வந்த மினி பஸ் மோதியது. இதில் காயமடைந்த அப்ெபண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.விபத்தைக் கண்டு ஆவேசமடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய மினி பஸ்சை மறித்து சிறைபிடித்தனர். அதை ஓட்டி வந்த டிரைவருடன் வாக்குவாதம் நடந்தது.அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நடுரோட்டில் மினி பஸ் சிறைப்பிடித்து நிறுத்தப்பட்டதால் பிற வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் நெருக்கடி ஏற்பட்டது. தெற்கு போலீசார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, பஸ்சை விடுவித்து, ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

