நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமை வகித்தார். பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வியில் எந்த பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம். கல்லுாரியை தேர்வு செய்வது, போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்துவது, வங்கி கடன், கல்வி உதவித்தொகைகள் பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

