/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைந்த செலவில் அதிக வருவாய்; இயற்கை விவசாயத்தில் சாத்தியம்
/
குறைந்த செலவில் அதிக வருவாய்; இயற்கை விவசாயத்தில் சாத்தியம்
குறைந்த செலவில் அதிக வருவாய்; இயற்கை விவசாயத்தில் சாத்தியம்
குறைந்த செலவில் அதிக வருவாய்; இயற்கை விவசாயத்தில் சாத்தியம்
ADDED : மே 03, 2024 11:17 PM
உடுமலை:உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இது மட்டுமின்றி, தென்னை விவசாயம், காய்கறிகள் சாகுபடியும் நடந்து வருகிறது.
இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கோவை வேளாண் பல்கலை, இறுதி ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், மடத்துக்குளம் வட்டாரத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், கடத்தூர் கிராமத்தைச்சேர்ந்த அங்கக விவசாயி கலைச்செல்வன், தோட்டத்தில் களப்பயிற்சி மேற்கொண்டனர்.
இயற்கை விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள, பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், இ.எம்., கரைசல் தயாரித்தல், பத்து இலை கரைசல், மீன் அமிலம் உள்ளிட்டவை தயாரித்தல், பயிர்களுக்கு பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் பயன்கள் குறித்து விளக்கினார்.
பயிர்களுக்கு, இ. எம்., கரைசல், ஜீவாமிர்தம், பஞ்ச கவ்யம் மற்றும் பத்து இலை கரைசல் தெளிப்பதால், பயிர்களில் நோய் தாக்குதல் பாதிப்பு இல்லை.
தென்னை மகசூல் பெருகுவதாகவும், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் செலவும் மிகவும் குறைவு. இயற்கை முறை சாகுபடியில் குறைந்த செலவில், அதிக மகசூல் மற்றும் ரசாயன கலப்பு இல்லாத உணவு பொருட்கள் உற்பத்தி செய்ய முடியும்.
இன்றைய சூழலில், ரசாயன இடுப்பொருட்கள், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகள், மண்ணை மலடாக்கும். அங்கக வேளாண்மை முறைகளைப் பின்பற்ற விவசாயிகள் முன் வர வேண்டும், என விளக்கினார்.
இம்முகாமில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.