/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருளில் மூழ்கும் மலைவாழ் கிராமங்கள் 'சோலார் பேனல்' மாற்றி தர கோரிக்கை
/
இருளில் மூழ்கும் மலைவாழ் கிராமங்கள் 'சோலார் பேனல்' மாற்றி தர கோரிக்கை
இருளில் மூழ்கும் மலைவாழ் கிராமங்கள் 'சோலார் பேனல்' மாற்றி தர கோரிக்கை
இருளில் மூழ்கும் மலைவாழ் கிராமங்கள் 'சோலார் பேனல்' மாற்றி தர கோரிக்கை
ADDED : ஆக 20, 2024 02:12 AM
உடுமலை;குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளை, மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றித்தர வேண்டும் என, மலைவாழ் கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன.
வனப்பகுதியில், பல தலைமுறைகளாக வசித்து வரும் மலைவாழ் கிராம மக்கள், பல்வேறு அடிப்படை தேவைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பாதுகாப்பற்ற குடிநீர்
மலைத்தொடரில் உருவாகும் சிற்றாறுகளில் கிடைக்கும் தண்ணீரையே, மலைவாழ் கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். பல்வேறு காரணங்களால், குடியிருப்புக்கு தேவையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை.
குருமலை, குழிப்பட்டி, கோடந்துார், ஈசல்திட்டு உட்பட பல கிராம மக்கள், குடியிருப்புக்கு தனியாக குடிநீர் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, பல ஆண்டுகளாக தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மேடான பகுதிகளிலிருந்து, குடியிருப்புக்கு தண்ணீர் கொண்டு வர அமைக்கப்பட்ட குழாய்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதால், தொடர் தட்டுப்பாடு அப்பகுதியில் நிலவுகிறது.
சில மாதங்கள், சிற்றாறுகளில், சீரான நீர் வரத்து இல்லாததால், மலைப்பகுதியில், வசித்தும், தாகத்தில் தவிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
இருளில் தவிப்பு
மலைவாழ் குடியிருப்புகளுக்கு, சோலார் பேனல்கள் வாயிலாக, தெருவிளக்குகள் அரசால் அமைத்து தரப்பட்டன. முறையாக பராமரிக்காததால், பல மலைவாழ் கிராமங்கள் இருளில் மூழ்குவது தொடர்கதையாகியுள்ளது.
வீடுகளுக்கு அளிக்கப்பட்ட, சோலார் பேனல்களும் பழுதடைந்துள்ளதால், மக்கள் தவிக்கின்றனர்.
இரவு நேரங்களில், உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக, வனவிலங்குகள் குடியிருப்புக்குள் வரும் போது, அவற்றை இருளில் எதிர்கொள்ள முடியாமல், பாதிக்கப்படுகின்றனர்.
பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ், புதிய சோலார் பேனல்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்தகைய அடிப்படை வசதிகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம், வன உரிமைக்குழுக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலைவாழ் கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.