ADDED : ஜூன் 26, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹிந்து பாரத் சேனா சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளைக் கண்டித்தும், தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒடுக்ககோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.