ADDED : ஜூன் 28, 2026 08:20 PM
திருப்பூர்: ஸ்ரீ அலகுமலை முருகன் டிரஸ்ட் மற்றும் ஹிந்து முன்னணி சார்பில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் உள்ள ஹிந்து முன்னணி அலுவலகத்தில் நடந்தது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். இதில், மொத்தம் 103 பேருக்குப் பள்ளிச் சீருடைகள் மற்றும் ஸ்கூல் பேக்குகள் வழங்கப்பட்டன. மேலும், 15 கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்குக் கல்விக்கட்டணம் செலுத்தப்பட்டதோடு, ஒரு மாணவருக்கு மூன்று ஆண்டுகளுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் ஏற்பதாக நிர்வாகிகள் உறுதியளித்தனர்.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், அலகுமலை முருகன் டிரஸ்ட் செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
––
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாணவ, மாணவியருக்கு சீருடைகள், ஸ்கூல் பேக்குகளை வழங்கினார்.
