UPDATED : ஜூன் 28, 2026 09:40 PM
ADDED : ஜூன் 28, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
அவிநாசி:அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், ஜூலை 2ம் தேதி நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகள் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளதாக வணிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நகர விற்பனைக்குழு பரிந்துரைத்த 143 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி, அனுமதியின்றி செயல்படும் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
