/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலை உத்தரவு பெட்டியில் இளநீர் 'வறட்சி நீங்கும்' என நம்பிக்கை
/
சிவன்மலை உத்தரவு பெட்டியில் இளநீர் 'வறட்சி நீங்கும்' என நம்பிக்கை
சிவன்மலை உத்தரவு பெட்டியில் இளநீர் 'வறட்சி நீங்கும்' என நம்பிக்கை
சிவன்மலை உத்தரவு பெட்டியில் இளநீர் 'வறட்சி நீங்கும்' என நம்பிக்கை
ADDED : ஆக 18, 2024 12:50 AM

திருப்பூர்;சிவன்மலை கோவில், ஆண்டவன் உத்தரவுப்பெட்டியில் பொருள் மாற்றப்பட்டு, நேற்று, இரண்டு இளநீர் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பூர் மாவட்டம், சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில் தோன்றி, குறிப்பிடும் பொருட்களை, இறைவன் உத்தரவாக ஏற்று, உத்தரவு பெட்டியில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் கனவில் தோன்றியதாக, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தால், மீண்டும் பூ கட்டி வைத்து, அனுமதி பெற்ற பிறகே, உத்தரவு பெட்டியில் அப்பொருள் வைக்கப்படுகிறது. கடந்த ஏப்., 28 முதல் சிறிய வேல் வைத்து பூஜை நடந்து வந்தது. நேற்று, ஆண்டவன் உத்தரவு பெட்டியில், பொருள் மாற்றப்பட்டு, இரண்டு இளநீர் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில், ''அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்க விழா நடந்த நாளில், உத்தரவு பெட்டியில் இளநீர் வைக்கப்பட்டுள்ளது. வறட்சிக்கு இலக்கான பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில், இளநீர் போன்ற தண்ணீர் நிரம்பும்; இறைவன் அருளால், பவானி ஆற்று தண்ணீர், குளம், குட்டைகளில் நிரம்பும்; அதனால், தென்னை மர தோப்புகள் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இளநீர் என்பது இறைவனின் அபிஷேக பொருளாகவும் இருப்பதால், வறட்சி நீங்கி தாகம் தணியும் என்பதை உணர்த்துவதாக இது அமைந்துள்ளது'' என்றனர்.

