/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்குவாரிக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்
/
கல்குவாரிக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்
ADDED : மே 01, 2024 11:45 PM
பல்லடம் : சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு எதிராக, கலெக்டர் அலுவலகம் முன் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
பல்லடம், கோடங்கிபாளையம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர், 10வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது:
கல்குவாரியில் கனிமவள கொள்ளை நிரூபிக்கப்பட்ட பின்னரும், மூன்று ஆண்டுகளாக வழக்கு பதிவு செய்யவில்லை. கலெக்டர், ஆர்.டி.ஓ, கனிம வளத்துறை துணை இயக்குனர், உதவி இயக்குனர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். இருப்பினும், சம்மந்தப்பட்ட கல்குவாரி மீது வழக்குப் பதியப்படவில்லை.
ஊழல் செய்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதனை பொதுவெளியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறோம்.
இதற்கும் அதிகாரிகள் செவி சாய்க்காததால், இன்று காலை, 10.00 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

