/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொண்டேன்
/
வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொண்டேன்
ADDED : மார் 07, 2025 11:00 PM

அவிநாசி, கைகாட்டிப்புதுார், நாடார் காலனியில் வசிப்பவர் அபிராமி. இரண்டு பெண்கள், ஒரு மகன் உள்ளனர்.
கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து வரும் அபிராமி கூறியதாவது:
கணவர் தென்னை மரம் ஏறும் தொழில் பார்த்து வருகிறார். பதநீர், கருப்பட்டி ஆகியவை விற்பனை செய்து வருகிறோம். 2019ம் ஆண்டு கணவர் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். அதில் பலத்த காயம் ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் கடை வைத்து ஓரளவு குடும்பத்தின் பொருளாதார தேவைகளை சமாளித்து வருகிறேன்.
கணவரின் வருமானமே போதிய அளவில் நிறைவானதாக இருந்ததால், மூவரையும் நன்றாக படிக்க வைத்தோம். காலையில் கல்லுாரி செல்லும் முன் மகன் மற்றும் வேலைக்கு போவதற்குள் மகளும் என இருவரும் சிறிது நேரம் கடையின் வியாபாரத்தை பார்த்துக் கொள்கின்றனர். மாலை வரை நான் இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் கடையை நடத்தி வருகிறேன். கணவர்குணமாகி மீண்டும் மரம் ஏறி, பதநீர் இறக்கிகருப்பட்டி காய்ச்சும் வேலை செய்து வருகிறார். எந்த சூழலிலும் பெண்கள் மன தைரியத்தை இழக்க முடியாது.