/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டை
/
மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டை
ADDED : ஜூலை 19, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் கண், காது - மூக்கு - தொண்டை, எலும்புமுறிவு, நரம்பியல், மனநல மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகள் குறித்து பரிசோதித்தனர். மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 63 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டையும்; 15 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை புதுப்பித்து கொடுக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த்ராம்குமார், அடையாள அட்டை வழங்கினார்.