/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
ADDED : ஜூலை 17, 2024 08:38 PM
மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த மருத்துவ பரிசோதனை முகாமில், 47 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
கண், காது - மூக்கு - தொண்டை, மனநலம், நரம்பியல், எலும்புமுறிவு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளை பரிந்துரைத்தனர்.
மாற்றுத்திறனாளிகள் 47 பேருக்கு புதிய அடையாள அட்டையும்; 13 மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை புதுப்பித்து கொடுக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராமகுமார், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
இது போல், அவ்வப்போது நடைபெறும் மருத்துவ முகாமினை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- நமது நிருபர் -