/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வங்கதேசத்தில் இயல்பு திரும்பினால் நுால் - துணி தேவை அதிகரிக்கும்'
/
'வங்கதேசத்தில் இயல்பு திரும்பினால் நுால் - துணி தேவை அதிகரிக்கும்'
'வங்கதேசத்தில் இயல்பு திரும்பினால் நுால் - துணி தேவை அதிகரிக்கும்'
'வங்கதேசத்தில் இயல்பு திரும்பினால் நுால் - துணி தேவை அதிகரிக்கும்'
ADDED : ஆக 08, 2024 12:11 AM

ஆயத்த ஆடை ஏற்றுமதியில், சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வங்கதேசம், மாதம், 30,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. உள்நாட்டு குழப்பத்தால், ஆடைகள் குறித்த நேரத்தில் டெலிவரி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
குறித்த நேரத்தில் ஆர்டர்களை அனுப்ப முடியாத சூழலில், குறிப்பிட்ட ஆர்டர்களை மற்ற நாடுகளுக்கு வழங்குவது வழக்கம். நமது நாட்டில் இருந்து, மாதம், 11 ஆயிரம் கோடி முதல், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது.
இந்தியாவில், உற்பத்தி கட்டமைப்பு வலுவாக இருப்பதால், கூடுதலாக, மாதம் 2,500 கோடி ரூபாய் வரை ஏற்றுமதி செய்ய முடியும். தற்போது, குறுகியகால வர்த்தக வாய்ப்புகள், இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதாக, ஜவுளி தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியா டெக்ஸ் பிரனெர்ஸ் கூட்டமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
வங்கதேச ஏற்றுமதி வர்த்தகத்தில், 85 சதவீதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி பங்கு வகிக்கிறது. விரைவாக இத்துறையில் இயல்புநிலை திரும்புமென நம்புகிறோம். அதன்படி, இந்தியாவில் உற்பத்தியாகும் நுால் மற்றும் துணிகளுக்கான தேவையும், அந்நாட்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறுகிய கால அடிப்படையில் ஆயத்த ஆடைகளுக்கான ஆர்டர் இந்தியாவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
அந்நாட்டில், நுாற்பாலை கட்டமைப்பு இல்லை; பிற நாடுகளை சார்ந்துள்ளனர். இந்தியா - வங்கதேசம் ஆகிய இருநாடுகளும், தங்களுடைய தனிப்பட்ட பலத்தை வலுப்படுத்த 'சீனா பிளஸ் ஒன்' என்ற வாய்ப்பை பயன்படுத்துவதே நீண்டகால கொள்கையாக இருக்கும். வங்கதேசம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமென எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.