/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழநியை மாவட்டமாக்கினால் உடுமலையை இணைக்காதீங்க
/
பழநியை மாவட்டமாக்கினால் உடுமலையை இணைக்காதீங்க
ADDED : மார் 14, 2025 11:02 PM

உடுமலை; உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளை, புதிதாக உருவாக்க திட்டமிட்டுள்ள பழநி மாவட்டத்துடன் இணைக்கக்கூடாது என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக அரசு, புதிதாக பழநி மாவட்டம் உருவாக்கவும், அதில் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்துடன், கொங்கு மண்டல பகுதிகளை இணைக்கக்கூடாது என வலியுறுத்தி, பொதுமக்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத்தலைவர் ஈசன், மாநில பொதுச்செயலாளர் முத்துவிஸ்வநாதன் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.