/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனநலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கலாம்
/
மனநலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கலாம்
மனநலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கலாம்
மனநலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கலாம்
ADDED : மார் 07, 2025 12:08 AM
திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மனநலம், பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்களை மீட்டு, சிகிச்சை அளிக்க ஆதரவற்றோர் மையம் செயல்படுகிறது.
பொது இடங்களில் யாருடைய அரவணைப்பும் இல்லாமல் தனியே இருப்பவர்களை இங்கு கொண்டு வந்து விடலாம். மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்குகின்றனர். அனுமதிக்கப்பட்டவர்கள், நினைவு திரும்பி உறவினர், குடும்பத்தார் அல்லது நண்பர்கள் குறித்த விபரங்களை தெரிவித்தால், அவர்களுடன் சேர்த்து வைக்கும் பணியை இம்மையம் செய்கிறது.
இது குறித்த, கூடுதல் விபரங்களுக்கு 94895 14536 என்ற எண்ணில் அழைக்கலாம் என அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.