/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்
/
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்
ADDED : ஆக 29, 2024 12:16 AM

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் நடந்த போட்டியில், திருப்பூர் மாவட்டம் சார்பில் பெண்கள் சீனியர், 61.5 கிலோ எடைப்பிரிவு, குமிட்டே பிரிவில் பங்கேற்ற கலைச்செல்வி, வெள்ளிப் பதக்கம் பெற்றார். கடந்த வாரம் சென்னையில் நடந்த, தென் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்று, வெள்ளி பதக்கம் பெற்றார்.அவர் கூறியதாவது:
பெரியாண்டிபாளையத்தில் உள்ள ேஷாபுகாய் சக்தி கராத்தே கிளப்பில், கராத்தே பயிற்சி பெற்று வருகிறேன். சிறு வயது முதலே கராத்தே விளையாட்டில் உள்ள ஆர்வமிகுதியில், 10 வயதில் இருந்து தொடர்ந்து கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த, சில ஆண்டுகளாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்று, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது என் விருப்பம். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆசிய, உலகளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது என் லட்சியம். ஒலிம்பிக் போட்டி கராத்தே விளையாட்டு அறிமுகமானால் அதிலும் பங்கேற்க வேண்டும் என்பது என் ஆசை. கராத்தே வீராங்கனையாக மட்டுமன்றி, நடுவர் பயிற்சி முடித்து, பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறேன்.

