sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'திறன்' காட்டினால் சந்தை வசப்படும்... உள்நாட்டு சந்தையை கைப்பற்றி சரியான தருணம்!

/

'திறன்' காட்டினால் சந்தை வசப்படும்... உள்நாட்டு சந்தையை கைப்பற்றி சரியான தருணம்!

'திறன்' காட்டினால் சந்தை வசப்படும்... உள்நாட்டு சந்தையை கைப்பற்றி சரியான தருணம்!

'திறன்' காட்டினால் சந்தை வசப்படும்... உள்நாட்டு சந்தையை கைப்பற்றி சரியான தருணம்!


ADDED : செப் 02, 2024 11:33 PM

Google News

ADDED : செப் 02, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;''உள்நாட்டு விற்பனைக்கான பின்னலாடைகளை சந்தைப்படுத்த மிகவும் சரியான தருணம் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுசெயலாளர் திருக்குமரன் தெரிவித்தார்.

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், உள்நாட்டு உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து ஆலோசிக்கும் வகையில், சிறப்பு ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது. உள்நாட்டு உற்பத்தி துணைக்குழு தலைவர் பிரேம் அகர்வால் தலைமை வகித்தார்.

ஏற்றுமதியாளர்கள் சங்க பொது செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி, செயற்கை இழை ஆடை உற்பத்தி துணை குழுவின் தலைவர் அருண் ராமசாமி, துணை தலைவர் சுனில்குமார், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று ஆலோசித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக, 'டிக்ஸி' நிறுவனத்தின் பிரேம் ஷிக்கா, 'லக்ஸ் இன்டஸ்ட்ரீஸ்' நிர்வாக இயக்குனர் ராகுல் டோடி, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர் சங்க பொதுசெயலாளர் 'ரோபோ' ரவிச்சந்திரன், 'ஓம்ஸ் பியூஷன்' நிட்வேர் உரிமையாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்று கருத்துகளை பேசினர்.

உள்நாட்டு உற்பத்தி துணைக்குழு தலைவர் பிரேம் அகர்வால், இந்திய சந்தையின் நுணுக்கமான திறன்களையும், உற்பத்தியை சந்தைப்படுத்துவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினார். உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத்தினர், உள்நாட்டு பின்னலாடை வர்த்தக வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் உள்ள பெரிய வர்த்தக நிறுவனங்கள், தரமான ஆடைகளுக்காக திருப்பூரை நோக்கி வந்து கொள்கின்றன. இதன்மூலம், புதிய வர்த்தக வாய்ப்புகளை கவர முடியும். திருப்பூர் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் பேசினர்.

--------------------------------

மதிப்பீடு முக்கியம்...

திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி 25 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறைவான மதிப்பீடு; சரியாக மதிப்பீடு சய்ய வேண்டும். உள்நாட்டு உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க செய்ய வேண்டும்.

- குமார் துரைசாமி

இணை செயலாளர்

சந்தைப்படுத்த வாய்ப்பு...

இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் இருக்கிறது. இந்தியர்களின், தனிநபர் வருமானம், தற்போது அதிகரித்துள்ளது. உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள், இந்திய சந்தையில் உற்பத்தியை சந்தைப்படுத்த மிகவும் சரியான தருணம்.

- திருக்குமரன்

பொதுசெயலாளர்






      Dinamalar
      Follow us