/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறக்குமதி சரக்கு கன்டெய்னர் லாரிகள் ஏற்றுமதி சரக்குகளை ஏற்றிச்செல்ல தடை
/
இறக்குமதி சரக்கு கன்டெய்னர் லாரிகள் ஏற்றுமதி சரக்குகளை ஏற்றிச்செல்ல தடை
இறக்குமதி சரக்கு கன்டெய்னர் லாரிகள் ஏற்றுமதி சரக்குகளை ஏற்றிச்செல்ல தடை
இறக்குமதி சரக்கு கன்டெய்னர் லாரிகள் ஏற்றுமதி சரக்குகளை ஏற்றிச்செல்ல தடை
ADDED : செப் 01, 2024 02:19 AM
திருப்பூர்;''துறைமுகத்தில் இருந்து, இறக்குமதி சரக்குஎடுத்து வரும் கன்டெய்னர் லாரிகள், திரும்பி செல்லும் போது ஏற்றுமதி சரக்குகளை ஏற்றிச்செல்லக்கூடாது'' என, சுங்கவரித்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தமிழகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம், துாத்துக்குடி துறைமுகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. துறைமுகத்துக்கான சரக்கு போக்குவரத்துக்காக, கன்டெய்னர் லாரிகள் இயக்கப்படுகின்றன.
சுங்கவரித்துறை விதிமுறைகளின்படி, இறக்குமதி சரக்கை எடுத்து வரும் துாத்துக்குடி கன்டெய்னர் லாரிகள், திரும்பி செல்லும் போது எவ்வித சரக்கையும் ஏற்றிச்செல்லக்கூடாது. மாறாக, ஏற்றுமதி சரக்குகளை, குறைந்த வாடகையில் விதிமுறையை மீறி எடுத்துச்செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள், இதுதொடர்பாக, சுங்கவரித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். கடந்த நான்கு மாதங்களாக, தொடர் விசாரணை நடந்து வந்த நிலையில், வரும் 2ம் தேதி முதல், துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் கன்டெய்னர் லாரிகள், ஏற்றுமதி சரக்கு ஏற்றிச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் எக்ஸ்போர்ட் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:
துறைமுகத்தில் இருந்து இறக்குமதி சரக்கை கொண்டுவரும் லாரிகள், ஏற்றுமதி சரக்கை ஏற்றி செல்லக்கூடாது. அவ்வாறு விதிமுறை மீறி ஏற்றிச் செல்வதால், கன்டெய்னர் லாரிகள் இயக்கம் பாதிக்கப்படும். பொருட்களுக்கும் பாதுகாப்பு இருக்காது என, புகார் அளித்தோம். சுங்கவரித்துறை கமிஷனர்உட்பட, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர், இப்பிரச்னையில் எங்களுக்கு உதவி செய்தனர்.
இறக்குமதி சரக்கை கொண்டு வரும் லாரிகள், திருப்பூர் போன்ற நகரங்களில் இருந்து ஏற்றுமதி சரக்கை ஏற்றிச்செல்ல கூடாது; மீறினால், சட்டரீதியான நடவடிக்கை பாயுமென, சுங்கவரித்துறை எச்சரித்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.