/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் விபத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தல்
/
மின் விபத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தல்
மின் விபத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தல்
மின் விபத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 06, 2024 10:46 PM
திருப்பூர்;மின் விபத்தில் பலியாகும் பணியாளர் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசாணையை செயல்படுத்த வேண்டுமென, மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஒவ்வொரு சங்கத்தினரும் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளனர். காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
வேலைப்பளு ஒப்பந்தத்துக்கு எதிராக வெளியிட்ட உத்தரவுகளை வாபஸ் பெற வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தை களைந்து, புதிய ஒப்பந்தம் உருவாக்க வேண்டும். பணியாளர் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.
அரசு ஊழியர் பெறும் குடும்ப நல நிதி ஐந்து லட்சம் ரூபாயை, மின்வாரிய பணியாளருக்கும் வழங்க வேண்டும். மின் விபத்தில் பலியாகும் ஊழியர் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசாணையை நிறைவேற்ற வேண்டும்.
கடந்த, 2019 டிச. மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, 6 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும். 'கேங்மேன்'களுக்கு, இடமாற்றம் மற்றும் கள உதவியாளர் பணிமாற்றம் வழங்க வேண்டும். கணக்கீட்டு பிரிவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) திருப்பூர் கிளை நிர்வாகிகள் கூறுகையில், 'அத்தியாவசிய கோரிக்கையை வலியுறுத்தி, 9 ம் தேதி, சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். திருப்பூர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடக்கிறது,' என்றனர்.