/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரைதட்டிய குளங்கள்; நிலத்தடி நீர் சரியும்
/
தரைதட்டிய குளங்கள்; நிலத்தடி நீர் சரியும்
ADDED : ஏப் 27, 2024 01:34 AM

அவிநாசி;அவிநாசி அருகே சேவூர் குளம், நீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், குளத்தில் மையப்பகுதியில் இருந்த விவசாயிகள் வண்டல் மண் எடுத்து செல்கின்றனர்.
அவிநாசியில், ஆண்டு சராசரி மழைப்பொழிவு, 600 மி.மீ., மட்டுமே. இதனால், ஆண்டுதோறும் கோடையில், அவிநாசி சுற்றுப்புற பகுதியில், தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும். ஆனால், கடந்தாண்டுகளில் பெய்த மழையில், குளம், குட்டைகள் நிரம்பியதும் உண்டு.
ஆனால், இந்தாண்டு கோடை வறட்சியால், அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. இதில், அவிநாசி அருகேயுள்ள சேவூரில், 150 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள குளம், கடந்தாண்டு நிரம்பியது.
குளத்தில் நீர் தரைதட்டி கிடக்கும் நிலையில், சிலர் குளத்தின் மையப்பகுதியில் இருந்து, விவசாயிகள் சிலர், மாட்டு வண்டியில் மண் எடுத்து செல்கின்றனர்.
சேவூர் மட்டுமின்றி அருகேயுள்ள முறியாண்டம்பாளையம், நடுவச்சேரி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளும் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. தரைதட்டிய குளங் களால், நிலத்தடி நீர் கடுமையாக சரியும் அபாயம் உள்ளது.

