ADDED : ஜூன் 29, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லுாரிலுள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், அறங்காவலர் குழு தலைவராக முருகேசன் தேர்வு செய்யப்பட்டார்; அறங்காவலர்களாக பிரியா, சிவக்குமார், அன்னபூரணி, ஜெகதீசன் பொறுப்பேற்றனர். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் தலைமை வகித்தார். துணை கமிஷனர் (நகை சரிபார்ப்பு) ஹர்ஷினி முன்னிலையில் பதவியேற்பு நடந்தது.
இதபோல், பி.என்., ரோடு, பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சவுந்திரம் பதவியேற்றார். அறங்காவலர்களாக, கார்த்திகேயன், யுத்தனமூர்த்தி, ஜெயக்குமார், காளிமுத்து ஆகியோர் பதவியேற்றனர். செயல் அலுவலர்கள் சீனிவாசன், வளர்மதி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முத்துராமன், கோவில் ஆய்வாளர் செல்வப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.