/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.1.91 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் திறப்பு
/
ரூ.1.91 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் திறப்பு
ADDED : ஆக 13, 2024 02:16 AM

உடுமலை;உடுமலையில், 1.91 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அறிவு சார் மையம் திறந்து வைக்கப்பட்டது.
உடுமலை நகராட்சி, யு,கே.சி., நகர் நகராட்சி பள்ளி அருகில், தமிழக அரசு சார்பில், 1.91 கோடி ரூபாய் செலவில் அறிவு சார் மையம் கட்டப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கான அனைத்து வகையான நுால்கள், பொது அறிவு நுால்கள், இணைய தள வசதியுடன் கூடிய, கம்ப்யூட்டர்கள், ஏ.சி., வசதியுடன் கூடிய படிப்பறைகள் மற்றும் எல்.இ.டி., திரையுடன் கூடிய பயிற்சி அரங்கு மற்றும் குழந்தைகளுக்கான அரங்கு என பல்வேறு வசதிகளுடன் நுாலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அறிவு சார் மையத்தில் நடந்த விழாவில் நகராட்சித்தலைவர் மத்தீன், முன்னாள் நகராட்சித்தலைவர் வேலுசாமி மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

