/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு இசைபயிற்சி வகுப்பு துவக்க விழா
/
மாணவர்களுக்கு இசைபயிற்சி வகுப்பு துவக்க விழா
ADDED : செப் 02, 2024 02:14 AM
உடுமலை;உடுமலை தமிழிசை சங்கத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான இசை பயிற்சி வகுப்பு துவக்கவிழா நடந்தது.
உடுமலை தமிழிசை சங்கத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இசை பயிற்சி வகுப்புகள் துவக்கவிழா, சுபாஷ் ரேணுகாதேவி கல்வி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. விழாவில் சங்க துணைத்தலைவர் மணி வரவேற்றார்.
செயலாளர் சண்முகசுந்தரம், அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு பேச்சு, இசை, பாட்டு, நடனம், கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்துவது குறித்து, ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், ஆசிரியர் கண்ணப்பன், தன்னார்வலர்கள் அமிர்தநேயன், சசிக்குமார், ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் விளக்கினர்.
பொள்ளாச்சி தமிழிசை சங்க செயலாளர் சண்முகம், போட்டிகள் நடத்துவதை ஊக்குவித்து பேசினார். பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும், இசை பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
சங்க துணைச்செயலாளர் மூர்த்தி நன்றி தெரிவித்தார்.