/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் பா.ஜ., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
/
பல்லடம் பா.ஜ., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 06, 2024 11:26 PM

பல்லடம்:பல்லடம், அண்ணா நகர், வடுகபாளையம், என்.ஜி.ஆர்., ரோடு பகுதிகளில், நகர பா.ஜ., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
திறப்பு விழாவுக்கு, நகர தலைவர் வடிவேலன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் வினோத் வெங்கடேஷ் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார். விவசாய அணி மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மூத்த நிர்வாகி திலீப் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணி மற்றும் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.
n சின்னக்கரை பஸ் ஸ்டாப்பில், அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார். ஒன்றிய தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் பாலு, செயலாளர் நித்யா, சிந்தனை பிரிவு தலைவர் குப்புராஜ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.