/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சத்துணவு திட்டத்தின் 43ம் ஆண்டு துவக்க விழா
/
சத்துணவு திட்டத்தின் 43ம் ஆண்டு துவக்க விழா
ADDED : ஜூலை 04, 2024 05:18 AM

திருப்பூர் : சத்துணவு திட்டத்தின், 43ம் ஆண்டு துவக்கவிழாவில், குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
தமிழக அரசின், சத்துணவு திட்டம், 1982 ஜூலை 1ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., திருச்சி மாவட்டம், பாப்பாகுறிச்சியில், இத்திட்டத்தை துவக்கி வைத்தார். ஒவ்வொரு குழந்தைக்கும், 100 கிராம் அரிசி, 7 கிராம் எண்ணெய், 15 கிராம் பருப்பு, 50 கிராம் காய்கறிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
சத்துணவு திட்டத்தில், இரண்டு முதல், 10 வயது வரையுள்ள, 60 லட்சம் குழந்தைகள் ஆண்டு முழுவதும் பயன்பெற்றனர். இந்நிலையில், இத்திட்டத்தின், 43ம் ஆண்டு துவக்க விழா, அ.தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது. கோல்டன் நகர் பகுதி, முத்து நகர் சத்துணவு மையத்தில், குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. பகுதி செயலாளர் ஹரிஹரசுதன் தலைமையில், குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். முன்னதாக, அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.