தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மழை குறைந்ததால் மீன் வரத்து அதிகரிப்பு

மழை குறைந்ததால் மீன் வரத்து அதிகரிப்பு

மழை குறைந்ததால் மீன் வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூன் 04, 2024 12:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2024 12:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:உடுமலையில், மழை குறைந்ததையடுத்து, மீன்வரத்து, விற்பனை அதிகரித்தது.

புயலின் தாக்கம் மற்றும் கடல்பகுதிகளில் கனமழை குறைந்ததையடுத்து, மீனவர்கள் கடலுக்கு சென்றதால், தமிழக கடலோர மாவட்டங்கள், கேரளாவின் அனேக இடங்களில் இருந்து, உடுமலை மீன் மார்க்கெட்டுக்கு இருநாட்களாக மீன் வரத்து அதிகரித்தது.

கடந்த இரு வாரங்களாக முகூர்த்தம் என்பதால், சரிந்திருந்த மீன் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. வஞ்சிரம், கிலோ 650, பாறை, 180, படையப்பா, 360, கட்லா, 150, மத்தி, 150, ரோகு, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வரத்து அதிகமாகி விலை குறைந்திருந்த நிலையில், விற்பனை சுறுசுறுப்பானதால், மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

'கடந்த ஒரு மாதத்தில், தற்போது தான் குறிப்பிட்டு சொல்லும்படி விற்பனை நடந்துள்ளது. மீன்வரத்து அதிகரித்ததால், மீன் விலை குறைந்தது. மீன் விலை குறைவு என்பதால், பொதுமக்கள் அதிகளவில் மீன்களை வாங்கிச் சென்றனர்,' என, மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us