/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரத்து உயர்வு; மீன் விற்பனை சூடுபிடித்தது
/
வரத்து உயர்வு; மீன் விற்பனை சூடுபிடித்தது
ADDED : ஜூலை 01, 2024 01:54 AM

திருப்பூர்;திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு வழக்கமாக, 30 டன் கடல் மீன்கள், 40 டன் டேம் மீன்கள் என, 70 டன் மீன்கள் வரும்.
மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்ததால், கடல் மீன் வரத்து, 40 டன்னாக குறைந்தது.
கடந்த வாரம் தடைவிலகிய போதும், மீனவர்கள் முழுமையாக கடலுக்கு செல்லாததால், கடல் மீன் வரத்து இயல்புக்கு திரும்பவில்லை.
தடைவிலக்கி பத்து நாட்களான நிலையில், பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடல் வரை மீன் பிடிக்க சென்று வருவதால், திருப்பூருக்கான மீன் வரத்து, உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை துவங்கி, நள்ளிரவு வரை 50க்கும் அதிகமான வேன்களில், ராமேஸ்வரம், மீன்கள் வந்திறங்கின.
ஆந்திரா, கேரளா மீன்கள் வரத்தும் அதிகமாகியது.
70 டன் மீன்கள் வந்ததால், அதிகாலை, 4:00 மணிக்கு சுறுசுறுப்பாக விற்பனை துவங்கியது. காலை 8:00 முதல், 10:00 மணி வரை மார்க்கெட்டுக்குள் செல்ல முடியாத நிலை வாடிக்கையாளருக்கு ஏற்பட்டது.
நேற்று, வஞ்சிரம் மீன், கிலோ 550, மத்தி, 200, படையப்பா, 300, வாவல், 350, பாறை, 180, சங்கரா, 280 ரூபாய்க்கு விற்றது.
வரத்து அதிகரித்த நிலையில், கடந்த வாரத்தை விட நடப்பு வாரம் மீன் விலை கிலோவுக்கு, 20 முதல், 50 ரூபாய் வரை குறைந்தது. வாடிக்கையாளர்களும் அதிகளவில் மீன் வாங்கி சென்றனர்.
இரண்டாவது வாரமாக மீன் விற்பனை களைகட்டியதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.