/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்கள் மகிழ்ச்சி
/
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்கள் மகிழ்ச்சி
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்கள் மகிழ்ச்சி
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்கள் மகிழ்ச்சி
ADDED : மே 10, 2024 11:16 PM

உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், கடந்தாண்டை விடவும் நடப்பாண்டில் அதிகரித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை, 9:30 மணி அளவில் அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
உடுமலையில் அரசு மற்றும் தனியார் உட்பட மொத்தமாக, 23 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.
மீதமுள்ள பள்ளிகளில், பெரும்பான்மையான பள்ளிகள் கடந்தாண்டை விடவும் நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில், குறைந்தபட்சமாக, 54 சதவீதம் பதிவானது. நடப்பாண்டில் குறைந்தபட்ச தேர்ச்சியாக 81 சதவீதம் பதிவாகியுள்ளது.
கீழ் கண்ட பள்ளிகளின் கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் அடைப்புக்குறியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி - 81 சதவீதம் (93), உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி - 89 சதவீதம் (சதம்), காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி - 91 சதவீதம் (93).
எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி - 91 சதவீதம் (சதம்), குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி - 91 சதவீதம் (98), உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - 92 சதவீதம் (78), குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி - 94 சதவீதம் (94).
பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி - 95 சதவீதம் (94), பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி - 95 சதவீதம் (93), வாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி - 96 சதவீதம் (96). ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி - 96 சதவீதம் (92), தேவனுார்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி - 96 சதவீதம் (சதம்).
அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள்
உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி - 97 சதவீதம் (96), உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி - 91 சதவீதம் (92), புங்கமுத்துார் காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளி - 91 சதவீதம் (93).
கணியூர் வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி - 95 சதவீதம் (96), குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி - 92 சதவீதம்(92).
உயர்நிலைப்பள்ளிகள்
துங்காவி அரசு உயர்நிலைப்பள்ளி - 84 சதவீதம் (88), பெரியபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி - 86 சதவீதம் (83), குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி - 89 சதவீதம் (95), கல்லாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி - 93 சதவீதம் (81).
கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப்பள்ளி - 94 சதவீதம் (97), சர்கார்கண்ணாடிபுத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி - 94 சதவீதம் (சதம்), வி.வேலுார் அரசு உயர்நிலைப்பள்ளி - 95 சதவீதம் (92), மலையாண்டிபட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளி- 97சதவீதம்(சதம்).
உடுமலை சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி - 97 சதவீதம் (87), கடத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி - 97 சதவீதம்(சதம்). சோழமாதேவி அரசு உயர்நிலைப்பள்ளி - 97 சதவீதம் (95).
கடந்தாண்டில் ஒன்பது அரசு பள்ளிகள், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன. நடப்பாண்டிலும் ஒன்பது பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சியில் பதிவாகியுள்ளது. ஆனால் பள்ளிகள் மாறுபட்டுள்ளன.
கடந்தாண்டில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற ஒன்பது பள்ளிகளில் புக்குளம், திருமூர்த்திநகர், ஆதிதிராவிடர் நலத்துறை அரசு உயர்நிலைப்பள்ளிகள் மட்டுமே, நடப்பாண்டிலும் சதம் அடித்துள்ளன. மற்ற பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 90க்கும் மேல் பெற்றுள்ளன.