/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகரித்த கொசுத்தொல்லை: ஊராட்சிகள் அலட்சியம்
/
அதிகரித்த கொசுத்தொல்லை: ஊராட்சிகள் அலட்சியம்
ADDED : ஆக 13, 2024 01:35 AM
உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது; தொடர் மழைக்கு பிறகு, கிராம குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியது.
விளைநிலங்கள் மற்றும் ரோட்டோரங்களில், பசுமை திரும்பியுள்ள நிலையில், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளில், தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், நன்னீர் மற்றும் கழிவு நீரில், உற்பத்தியாகும் கொசுக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த, தொலைநோக்கு அடிப்படையில், 'நொச்சி செடி' கள் வழங்கும் திட்டம், ஊரக வளர்ச்சித்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நொச்சி செடிகள் உற்பத்தி செய்து கிராமங்களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம், உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், செயல்பாட்டில் இல்லை.
இதே போல், குறிப்பிட்ட இடைவெளியில், கிராமங்களில், கொசு மருந்து தெளிக்கும் பணியையும், ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்வதில்லை. இதனால், கிராமங்களில், கொசுத்தொல்லை அதிகரித்து, மக்கள் திண்டாடி வருகின்றனர்.
எனவே, சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில், கொசு ஒழிப்பு பணிகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.