/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி பயன்பாட்டிற்கு திறக்க வலியுறுத்தல்
/
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி பயன்பாட்டிற்கு திறக்க வலியுறுத்தல்
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி பயன்பாட்டிற்கு திறக்க வலியுறுத்தல்
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி பயன்பாட்டிற்கு திறக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 09, 2024 02:45 AM

உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
உடுமலை பஸ் ஸ்டாண்ட்டிற்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழநி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் நிலையில், பஸ்கள் நிற்பதற்கான 'ரேக்' மற்றும் பயணியருக்கான அடிப்படை வசதிகள் இல்லை.
போதிய வசதியில்லாத இந்த பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், மூன்று ஆண்டுக்கு முன், நகராட்சி நுாற்றாண்டு விழா, சிறப்பு நிதியின் கீழ், விரிவாக்கத்திற்காக, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், 15 பஸ்கள் நிற்கும் ரேக், 12 கடைகள், நேரக்காப்பாளர் அறை, பயணியர் அமரும் வளாகம், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகளுடன் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது.
தற்போது, சுற்றுச்சுவர், நுழைவாயில் ஆர்ச் என பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் பணிகளை முடித்து, பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.
இதற்கு, நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.