/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குண்டம் திருவிழாவில் ராட்டினம் வெளியே அமைக்க வலியுறுத்தல்
/
குண்டம் திருவிழாவில் ராட்டினம் வெளியே அமைக்க வலியுறுத்தல்
குண்டம் திருவிழாவில் ராட்டினம் வெளியே அமைக்க வலியுறுத்தல்
குண்டம் திருவிழாவில் ராட்டினம் வெளியே அமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 26, 2025 04:35 AM
அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுார் பா.ஜ., மற்றும் பொது மக்கள் சார்பில், முதல் அமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு:
பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, ஏப்., 6 முதல், 12ம் தேதி வரை நடைபெறுகிறது. கோவில் வளாகத்தில் பொங்கல் வைப்பது, மஞ்சள் நீராடுவது, குண்டம் இறங்குதல் என லட்சக்கணக்கான பக்தர்களும் வருவர். பக்தர்கள் அதிகமாக கூடுவதால், கோவில் வளாகத்தில் இடம்பற்றா குறை ஏற்படுகிறது.
தற்போது கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்டுவதால், இடப்பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொழுதுபோக்கு சம்பந்தமாக இருக்கும் விளையாட்டு சாதனங்களை கோவிலுக்கு வெளியே நடத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.