/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துணிப்பை ஆர்டர்கள் வழங்க விசைத்தறியாளர் வலியுறுத்தல்
/
துணிப்பை ஆர்டர்கள் வழங்க விசைத்தறியாளர் வலியுறுத்தல்
துணிப்பை ஆர்டர்கள் வழங்க விசைத்தறியாளர் வலியுறுத்தல்
துணிப்பை ஆர்டர்கள் வழங்க விசைத்தறியாளர் வலியுறுத்தல்
ADDED : செப் 16, 2024 01:29 AM
பல்லடம்: 'ரேஷன் மற்றும் பொங்கல் பொருட்களை துணிப்பைகள் வாயிலாக வினியோகிக்க வேண்டும்; துணிப்பைகளுக்கான ஆர்டர்களை விசைத்தறிகளுக்கு வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
பொங்கல் இலவச வேட்டி, சேலை ஆர்டர்கள் விசைத்தறிக்கு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது ஈரோடு, திருச்செங்கோடு பகுதி விசைத்தறிகளுக்கே பெரும்பாலும் பயனளிக்கும்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகள் பெரும்பாலும் அகலமானவை. இவற்றில் வேட்டி, சேலை தயாரிப்பது சிரமம். ஏற்கனவே உற்பத்தியாகும் ரகங்களில் இருந்து திடீரென மாறுவதும் சிரமம். போதிய தொழிலாளர்களும் கிடையாது.
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் மற்றும் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலைகள் ஆகியவற்றை, காடா துணி பைகள் வாயிலாக வழங்க வேண்டும். இதற்கு, 70 லட்சம் மீட்டருக்கு மேல் காடா துணிகள் தேவைப்படும்.
துணிப்பைகளுக்கான ஆர்டர்களை, விசைத்தறிகளுக்கு வழங்குவதன் வாயிலாக, திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறிகள் பயனடைவர்.
பல லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.
இவ்வாறு கூறினார்.