/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வட்டியில்லா கடன்! 'நிடி ஆயோக்' பிரதிநிதியிடம் வலியுறுத்தல்
/
வட்டியில்லா கடன்! 'நிடி ஆயோக்' பிரதிநிதியிடம் வலியுறுத்தல்
வட்டியில்லா கடன்! 'நிடி ஆயோக்' பிரதிநிதியிடம் வலியுறுத்தல்
வட்டியில்லா கடன்! 'நிடி ஆயோக்' பிரதிநிதியிடம் வலியுறுத்தல்
ADDED : மே 16, 2024 05:53 AM

திருப்பூர் : மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு, வட்டியில்லா நீண்ட கால கடன் வழங்க வேண்டுமென, 'நிடி ஆயோக்' பிரதிநிதிகளிடம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வரும், 2024 - 29 வரையிலான, ஐந்தாண்டுகளுக்கான நிதி கொள்கைகளை தயாரிக்க ஏதுவாக, மாநிலம் வாரியாக, மத்திய அரசின் 'நிடி ஆயோக்' ஆலோசனையை துவங்கியுள்ளது. 'நிடி ஆயோக்' அதிகாரிகள் குழு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தியது.
சங்க தலைவர் சுப்பிரமணியன், பொது செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார்துரைசாமி ஆகியோர், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஆலோசனை குறித்து, சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
'வளம் குன்றா வளர்ச்சி' நிலைக்கு தேவையான அடுத்தகட்ட உதவி குறித்து, 'நிடி ஆயோக்' பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். பசுமை சார் உற்பத்தி ஆடைகளுக்கு, புதிய குறியீட்டு எண் வழங்க வேண்டும்.
'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில், சாயக்கழிவு சுத்திகரிப்பு செய்வதால், கிலோவுக்கு 30 ரூபாய் வரை உற்பத்தி செலவு அதிகரிக்கிறது. 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பை அமல்படுத்தி, தொழில் போட்டியை சமநிலையில் பராமரிக்க வேண்டும்.
சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தி செலவில், மின் கட்டணம் மட்டும், 40 சதவீதமாக இருக்கிறது; சோலார் போன்ற மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக, மானியத்துடன் கூடிய, வட்டியில்லா நீண்டகால கடன் உதவி அவசியம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். சாயத்தொழிலில் நிலவும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கி, ஒட்டுமொத்த பின்னலாடை தொழிலையும் பாதுகாக்க வேண்டுமென தெரிவித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.