/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எடை குறைவாக அரிசி சப்ளை ரேஷன் கடையில் விசாரணை
/
எடை குறைவாக அரிசி சப்ளை ரேஷன் கடையில் விசாரணை
ADDED : ஜூலை 23, 2024 11:28 PM

அனுப்பர்பாளையம்:அனுப்பர்பாளையம் ராஜா பவுண்டரி வீதியை சேர்ந்தவர் தரணி பிரியா, 26. இவர் ஆத்துப்பாளையம் அம்மா உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை, மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ரேஷன் கடையில் இலவச அரிசி வாங்கி உள்ளார்.
போதிய அரிசி வரவில்லை எனக்கூறி, 10 கிலோ அரிசி மட்டுமே கொடுத்துள்ளனர். ஆனால், அவரின் மொபைல் போனுக்கு, 20 கிலோ அரிசி வாங்கியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து அவர், திருப்பூர் வடக்கு குடிமை பொருள் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதனால், மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் பழனிசாமி, வடக்கு குடிமை பொருள் தாசில்தார் உஷாராணி, ஆகியோர், சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் ஆய்வு செய்து, கடை விற்பனையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ரேஷன் கடை விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக, தரணி பிரியாவிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.