/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதுகலை மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு
/
முதுகலை மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 25, 2024 11:03 PM
திருப்பூர் : அரசு கல்லுாரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நாளை (27 ம் தேதி) துவங்குகிறது.
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், இளங்கலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை, 95 சதவீதம் முடிந்துள்ள நிலையில், வரும், 27 ம் தேதி முதல், ஆக., 7ம் தேதி வரை முதுகலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லுாரி கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையை தொடர்ந்து ஆக., 10ம் தேதி தரவரிசைப்பட்டியல் கல்லுாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆக., 13 மற்றும், 14ம் தேதி நடக்கும். பொதுப்பிரிவினருக்கு ஆக., 19 முதல், 23ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு, ஆக., 28ல் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

