/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிரிக்கெட் அணியில் இடம் பெற அழைப்பு
/
கிரிக்கெட் அணியில் இடம் பெற அழைப்பு
ADDED : ஏப் 11, 2024 12:50 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அணியில் இடம் பெற ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், 14 மற்றும், 16 வயது கிரிக்கெட் அணி வீரர் தேர்வு, வரும், 20 மற்றும், 21 ம் தேதி, இரு நாட்கள், அவிநாசி, பழங்கரை டீ பப்ளிக் பள்ளியில் நடக்கவுள்ளது.
கடந்த, 2010, செப்., 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள், 14 வயது பிரிவிலும், 2008 செப்., 1க்கு பின் பிறந்தவர், 16 வயது பிரிவிலும் பங்கேற்கலாம். ஆர்வமுள்ள வீரர்கள் தங்கள் விபரங்களை https://www.dcat.in/news என்ற இணையதளத்தில், வரும், 19ம் தேதி மாலை, 4:00 மணிக்கு பதிவு செய்திட வேண்டும்.
தகுதித்தேர்வு காலை, 6.30க்கு துவங்கும்; குறைந்தபட்சம் அரை மணி நேரம் முன், மைதானத்தில் இருக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 9344207615 என்ற எண்ணில் தகவல் அறியலாம்.

