/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு விடுதியில் சேர மாணவருக்கு அழைப்பு
/
விளையாட்டு விடுதியில் சேர மாணவருக்கு அழைப்பு
ADDED : ஏப் 27, 2024 12:48 AM
திருப்பூர்;மாநில, தேசிய அளவில் சிறந்த வீரர், வீராங்கனையாக ஆர்வமுள்ள, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மே 13ல் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள மாநில அளவிலான நேரடித்தேர்வில் குத்துச்சண்டை, வாள்விளையாட்டு, பளுதுாக்குதல், ஸ்குவாஷ், ஜூடோ.
மே, 14ல் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மல்லர்கம்பம்; கடலுாரில் இருபாலருக்கான டேக்வாண்டோ, திருச்சியில் மாணவர்களுக்கான மல்யுத்தம், வூஷூ தேர்வு போட்டி நடக்கிறது.
மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள், மே, 8ம் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலுவலரை 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

