ADDED : ஏப் 02, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தே.மு.தி.க., பொது செயலாளர் பிரேமலதா திருப்பூர் வந்திருந்தார். குடியிருப்பு பகுதியில் காத்திருந்த பெண்கள், சிறுமியருடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.
அங்கிருந்தவர்களிடம்,'இங்க (திருப்பூரில்) தேர்தல்ல யாரு நிக்கிறாங்க, வேட்பாளர் எந்த கட்சி' என கேட்க, அங்கிருந்தவர்களுக்கு தெரியவில்லை. கட்சியினர் சிறிது துாரம் தள்ளியிருந்ததால், பதில் தர யாருமில்லை.
நடப்பதை அறிந்து, ஓடி வந்தார், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன்.
அவரிடம்,' இங்கே இரட்டை இலை தானே' என பிரேமலதா கேட்க, 'ஆமாங்க, ஆமாங்க' என குணசேகரன் பதிலளித்தார்.
' இங்க அ.தி.மு.க., வேட்பாளர் தானாம்; அப்ப, நீங்க எல்லாரும் இரட்டை இலைக்கே ஓட்டுபோட்டுறுங்கம்மா' என, பிரேமலதா பிரசாரம் செய்தார்.

